“Kingston” Movie Review –”கிங்ஸ்டன்” திரைப்பட விமர்சனம்

68

கடலுக்குள் சென்று இருக்கும் மர்மம்  நண்பர்களுடன் கடலுக்குள் சென்று  பிரச்சனையை தீர்க்க நினைக்கும் ஹீரோ ஜிவி, உயிருடன் திரும்பினாரா ? இல்லை ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா..? என்பதை சொல்ல பிரம்மாண்டமாக முயற்சித்திருப்பது தான் “கிங்ஸ்டன்”.

மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதி இருவர் நடிப்பும் அருமை.

கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான ஹீரோ ஜிவி ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி நடிப்பிலும் இசை மற்றும் பின்னணி இசையில் முத்திரை பதித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்,ஒளிப்பதிப்பு படத்தொகுப்பு என்ன படத்தில் அனைத்துமே பிளஸ்.

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் படக்குழுவின் சாதாரண உழைப்பு இல்லை

இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சி அவருக்கு வெற்றியை தேடித்தரும் என்பதில் அச்சமில்லை

மொத்தத்தில், “கிங்ஸ்டன்” சறுக்கல் இல்லாத வெற்றியான கடல் பயணம்