“Niram Marum Ulagil” Movie Review – “நிறம் மாறும் உலகில்” திரைப்பட விமர்சனம்

81

தன்னோட பிள்ளைகளை நன்றாக வளர்க்கும் அம்மா கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் சோகம்,பாசத்திற்காக ஏங்கும் மிக பெரிய தாதா, அம்மா மகன்கள் மீது வைக்கும் அன்பே வேறு வேறு நான்கு கதைகள் மூலம் சொல்லும் பாசப்  போராட்ட கதையே “நிறம் மாறும் உலகில்”.

பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி, வடிவுக்கரசி, சாண்டி அனைவருமே மிக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றது போல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் யோகி பாபுவை சந்திக்கிறார்,அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது திரைப்படத்தின் தொடர்ச்சி.

இயக்குனர் பிரிட்டோ ஜே.பி, ஒரு ஒரு கதையிலும் அம்மா பாசத்தை அளவில்லாமல் வாரி இறைத்திருக்கிறார், ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு பிளாஷ்பேக் என்று படத்தை சுவாரசியமா நகர்த்திக்கொண்டு செல்கிறார்.

ஒளிப்பதிப்பு படத்தொகுப்பு இசையமைப்பு என்ன படத்தில் அனைத்துமே பிளஸ்,நிஜ சம்பவத்தைக் அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டு இருக்கும் கதை எதிர்பாராத சுவாரஸ்ய திருப்பங்களே,நான்கு கதைகளும் சமூகப் பிரச்னைகள் உறவுகளின் சிக்கல்கள், பற்றிப் பேசுகின்றன. இயக்குநர் பிரிட்டோ திரைக்கதையை அழகாக கையாண்டிருக்கிறார்,

மொத்தத்தில் அம்மா என்ற பாசத்தில் எல்லை “நிறம் மாறும் உலகில்”எல்லாமே மாறும் என்பதை உணர்த்துகின்றது