Suzhal – The Vortex Season 2 Review

282

தற்போது Amazon Prime-யில் வெளியாகி இருக்கும் “சுழல் – தி வோர்டெக்ஸ் – சீசன் 2” விமர்னம்

2023 ஆம் ஆண்டு Amazon Prime-யில் வெளியான “சுழல்” ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது,அதே பரபரப்பை மீண்டும் பற்றவைத்து இருக்கும் சுழல் – 2 அதீத எதிர்பார்பை பூர்த்தி செய்து இருக்கிறதா என்று பார்ப்போம்.

பதற்றம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இத்தொடரை நிச்சயமாக பார்க்கலாம் முதல் பாகத்தை பார்க்க தவறியவர்களுக்கு அல்லது பார்த்தவர்களுக்கு சிறிது நினையூட்டல் போல முதலில் கதை சொல்லி ஆரம்பம் ஆகிறது சுழல் – 2

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல வழக்கறிஞர் லால் அவர்களின் கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது திரைக்கதை Police SI கதிர் மற்றும் Police Inspector சரவணன் ஆகியோர் இந்த கொலை வழக்கை விசாரிக்கின்றனர் விசாரணையின் போது, லால் அவர்களின் வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கௌரி கிஷன் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவரை கைது செய்த பின்னரும், கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் கொலையாளி யார் என்பதை நோக்கி கதைக்களம் அமைக்கப்பட்டுருக்கிறது

8 எப்பிசோட்கள் இந்த தொடரின் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையமாகக் கொண்டு, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கின்றன. முதல் பாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த தனது சித்தப்பாவை கொலை செய்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பாகத்தில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரது கதாபாத்திரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவணனின் எதிர்பார்க்காத திருப்பம், லால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கொலை வழக்கில் சரணடையும் 8 இளம் பெண்கள் ஆகியோரின் கதைகள், தொடரின் திரைக்கதையை உயிரோட்டமாக்குகின்றன,இறுதியில் லால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ன நடந்தது எல்லாமே எதிர் பார்க்காத திருப்பங்களாய் சொல்லப்பட்டு இருக்கிறது

நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் சினிமா ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமையும்.