“Nalla Perai Vaanga Vendum Pillaigale” Movie Review – “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” திரைவிமர்சனம்

133

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்து நடித்த படம் நல்ல பேரு வாங்க வேண்டும் பிள்ளைகளே,இந்த படத்தினை பாடகர் பிரதீப் குமார் தயாரிக்க, கதையினை இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கியுள்ளார்.

கதையின் நாயகன் ரவி எந்த வேலைக்கும் போகாமல் நபர்களுடன் சுற்றிக்கொண்டு, பெண்களுடன் தியேட்டர் செல்வது, வெளியில் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பேசி ஒரு அரசி என்ற பெண்ணின் நம்பரை வாங்குகிறார். மற்றும் அரசியின் பிறந்தநாளுக்கு பரிசுகொடுப்பதர்க்காக நண்பனை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து மாயவரம் செல்கிறார்.

மாயவரம் சென்றதும் அரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மற்றும் அரசியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். ரவிக்கு அரசியை தனியாக அழைத்துச்சென்று சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பூம்புகார் செல்கின்றனர்,

ஆனால் அரசிக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை இவர்கள் இருவரும் பூம்புகார் சென்றபிறகு என்ன ஆயிற்று என்பதும் ரவியின் இந்த மனநிலை மாறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

ரவி சிறப்பாக நடித்துள்ளார்,கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார்,இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது,இக்கால கட்டத்தில் இளைஞர்கள் செய்யும் எதார்த்தமான விஷயங்கள் தான் திரைப்படம், 2k கிட்ஸின் வாழ்வு ஆதாரம் என்று கூறலாம்.