அரிமாபட்டி சக்திவேல் திரைவிமர்சனம் – Arimapatti Sakthivel Movie Review

199

அறிமுக நடிகர் பவன் நடிப்பில் அரிமா பட்டி சக்திவேல். நாயகியாக மேக்னா மற்றும் சார்லி, சூப்பர் குட் சுப்பிரமணி,அழகு, பிர்லா போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அழகான ஒரு கிராமம் அந்த கிராமத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடு உண்டு என்னவென்றால் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்கிற கொள்கை மற்றும் கோட்பாடு கொண்ட கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்கிற இளைஞன், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.

நடிகர் சார்லி மிக யதார்த்தமான நடிப்பு. ஒரு தந்தையாக வாழ்ந்து உள்ளார்.
நடிகர் இமான் அண்ணாச்சி சிறிது நேரம் வந்தாலும் ஒரு அரசியல்வாதியாக தன்னை காட்டிக் கொள்ள முயன்றுள்ளார் இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக கை கொடுக்கவில்லை.

நாயகன் பவன் நன்றாக நடித்துள்ளார்.நாயகி மேக்னா மிக அழகாக உள்ளார்.
நன்றாக நடித்துள்ளார்.அழகு படத்தில் குணச்சித்திர வேடத்தில் ஒரு தாத்தாவாக நடித்துள்ளார்.
அவரது நடிப்பு நன்றாக உள்ளது.கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.அண்ணனாக வரும் பிர்லா போஸ் வில்லத்தனமாக நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது,காலங்கள் மாறினாலும் சாதி மாறாது என்று கூறும் கருத்து இத்திரைப்படம்.