ஒருவருக்கு அதிர்ஷ்டம் மட்டுமே வாழ்க்கையா? என்பதை அழகாக சினிமா பாணியில் எதார்த்தத்தை காட்டி படத்தை இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால், யோகிபாபு ஹீரோவாக கதையின் நாயகியாக ரேச்சல் ரபேகா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் லக்கி மேன்.
கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் யோகிபாபு, ஒவ்வொரு காட்சியையும் சாதாரணமாக நடித்து தான் காமெடியன் என்பதை மறக்க செய்துவிட்டார, யோகிபாபுவின் நடிப்பை மிஞ்சுமளவிற்க்கு நடிகை ரேச்சல் ரபேகா வாழ்ந்து காட்டிவிட்டார்.
இது போன்ற ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கும், உழைப்பை நம்பாமல், அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் ஒரு நல்ல உதாரண பாடமாக அமையும் என்பதே உண்மை
சிட் பண்ட் நிறுவனத்தில் பணம் செலுத்தி வருகிறார் யோகிபாபு அந்த சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபுவிற்கு குலுக்கல் முறையில் கார் ஒன்று பரிசாக விழுகிறது.
அதிர்ஷ்டம் அந்த கார் தான் என்று அதை கொண்டாடுகிறார். கார் வந்த அதிர்ஷ்டம் யோகிபாபுவின் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில் காரை யோரோ திருடிச் சென்று விடுகிறார்கள்.
யோகிபாபுவிற்கு அந்த கார் எப்படி திரும்ப கிடைக்கின்றது என்பதே படத்தின் ட்விஸ்ட் மீதிக் கதை,
காமெடி, என்று கலகலப்பாக சென்றாலும், திரைக்கதையை இரண்டாம் பாதியில் அழகா நகர்த்தி செல்கிறார் இயக்குனர்
உழைப்பு அதிஷ்டம் இரண்டுமே வேறு வேறு என்று புரியவைத்து க்ளைமாக்ஸ் காட்சியை சூப்பராக முடித்துவைத்து பாராட்டையும் பெறுகிறார் இயக்குனர்