அனுஷ்கா நடிப்பில் “Miss Shetty Mr Polishetty” திரைவிமர்சனம்

தென்னிந்திய சினிமாவில் உலகில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் அனுஷ்கா நடித்திருக்கும் படம் Miss Shetty Mr Polishetty இப்படத்தில் நடிகர்கள் நவீன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர், இந்த கதையினை இயக்குனர் மஹேஷ் பாபு இயக்கியுள்ளார்.

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் அனுஷ்கா. தனக்கு எல்லாமுமே தாய் தான் என்று இருக்கிறார். லண்டனில் மிகப்பெரும் நிறுவனத்தில் CHIEF குக்காக பணிபுரிகிறார் அனுஷ்கா.

தனது தாய்க்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் அனுஷ்கா. இந்தியா வரும் அனுஷ்கா அவர் தாயும் சிறிது நாட்கள் வாழ்கின்றனர் அந்த சிறிது நாட்களிலே தாயே இழந்து விடுகிறார் அனுஷ்கா. தாயைப் போல் அன்பு செலுத்த மற்றொரு துணை வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார் அனுஷ்கா.

அதற்காக திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் அனுஷ்கா. அந்த அந்த சமயத்தில் தனியார் மருத்துவமனையின் நாடுகிறார் அனுஷ்கா..

உடலுறவு இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்க நினைக்கும் அனுஷ்கா தனக்கான டோனரை தானே தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார். அதற்காக அங்கும் இங்குமாய் அலைகிறார் அனுஷ்கா. அப்போது நாயகன் நவீன் பாலிஷெட்டியை கண்டுபிடிக்கிறார் அனுஷ்கா,

அவருடன் நட்பாக பழகுகிறார் அனுஷ்கா. இந்த நட்பை நவீன் காதலாக நினைத்துக் கொள்கிறார். அனுஷ்காவிடம் காதலை சொல்லும் தருணத்தில் தான் எதற்காக உன்னிடம் பழகுகிறேன் என்பதை நவீனிடம் கூறி விடுகிறார் அனுஷ்கா, இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் நவின் பிறகு என்ன செய்தார் என்பது தான் படத்தின் மீதி கதை…

திரைக்கதையை மிக சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
ஒளிப்பதிவு பிரமாதம் மிக அழகாக எடுத்துள்ளனர்.

முதல் பாதையும் சரி இரண்டாம் பாதியும் சரி எந்த ஒரு சோர்வும் இல்லாமல் மிக நன்றாக காமெடியாகவே கொண்டு சென்று விட்டார் இயக்குனர்,நடிகர் நாசர் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

நடிகர் நவீன் மிக அற்புதமாக நடித்துள்ளார் அனுஷ்காவிற்கு ஈடாக கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளார் நடிகர் நவீன்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது,அனுஷ்காவிற்கு இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.நாம் இதுவரை பார்த்திட அனுஷ்காவை இப்படத்தில் பார்த்துள்ளோம்,அனுஷ்காவின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது,மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Comments (0)
Add Comment