இது என்னடா Title.! பாணி புரின்னு தானே யோசிக்குறீங்க புதுமையான ஒரு தலைப்புதான்
தண்டபாணி பெயர் கொண்டிருப்பதால் ஹீரோ லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் ஹீரோயின் சம்பிகா பூரி ஆகிறார்,
இந்த எட்டு எபிசோட் கொண்ட தொடரை அடுத்து என்ன நடக்க போகிறது என்று ஒரு ஆர்வத்தோடு ரசிக்கும்படியாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர்,
காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் Living together-ராக ஒன்றாக வாழ முடிவு செய்து தங்குகிறார்கள்,
ஒரு ஒரு நாளும் ஒரு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் முடிவில் என்ன நடக்கப்போகிறது என்பதே கதை,
காதலிக்கும் போது கவலைப்படாத இளைஞராக நடித்திருப்பவர் லிங்கா தனது காதலி எதிர்ப்பார்க்கும் சிறிய விஷயத்தில் வழக்கமான ஆண்களின் மனநிலையோடு யோசிக்கும் காட்சியில் சூப்பராக நடித்திருக்கிறார்,
ரோபோக்களை உருவாக்கும் Robot Scientist-ஆக நடித்திருக்கும் ஹீரோயின்ஜம்பிகாவின் நடிப்பு அபாரமாக இருந்தது,
ஹீரோவுக்கு நண்பராக வரும் வினோத் சாகர், காமெடி காட்சிகளின் மூலம் குணச்சித்திர நடிகராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
ஹீரோயின் அப்பா ரோலில் நடித்திருக்கும் இளங்கோ குமரவேல் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்,
பல காட்சிகளை விறுவிறுப்பு சேர்த்து கொடுத்தால் திரைப்படமாகவும் மாறக்கூடிய நல்ல அம்சமுள்ள கதையாக அமைத்து இருக்கும் பானி பூரி,
ஒரு துளி விரசம் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல காதல்,காமெடி,குடும்பப்பாசம் உள்ளடக்கிய கதையை சூப்பராக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்,
பானி பூரி – இனிப்பும் காரமும் கலந்து கொடுத்த சூப்பர் மசாலா Entertainment.