Koozhangal Movie Review – கூழாங்கல் திரைவிமர்சனம்

அறிமுக இயக்குனரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் “கூழாங்கல்” எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

அடித்தட்டு மக்களின் நலிவடைந்த வாழ்க்கையையும் அப்பட்டமாக சொல்லியிருப்பதோடு, பல்வேறு பிரச்சனைகளை காட்சி மொழியில் பேசியிருப்பது தான் “கூழாங்கல்” படத்தின் கதை.

அப்பா வேடத்தில் நடித்திருக்கும் கருத்துடையான் ரொம்பவே எதார்த்தமான நடிப்பால் கணபதியாகவே வாழ்ந்திருக்கிறார். தனது நடையில் கூட இப்படி ஒரு நடிப்பை காட்டமுடியுமா என்கிற அளவிற்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகன் வேடத்தில் நடித்திருக்கும் செல்லப்பாண்டி நடிப்பு பற்றி எந்தவித முன் அனுபவமும் இல்லை என்றாலும், முதல் படம் போல் இல்லாமல் நடித்திருக்கிறார். தந்தையின் கோபத்தை பார்த்து மிரண்டு போனாலும் அதை வெளிக்காட்டாமல் தைரியமாக அவரிடம் அடி வாங்கினாலும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் பாராட்டு பெறுகிறார்.

கேமரா கோணங்கள், இயற்கையான ஒளிப்பதிவு,யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சவுண்ட் டிசைன் அனைத்தும் சிறப்பாக அமைத்து வேறு தரத்திற்கு கொண்டு சென்றுது படத்திற்கு பலமாக அமைந்தது

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், கதாபாத்திரங்கள் தேர்வில் கவனம் செலுத்தியது படம் முழுவதிலும் தெரிகிறது. காட்சிகளை நீளமாக வைத்து வசனங்கள் மூலம் பேசாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளின்மூலம் பேசி வைத்து கைதட்டல் பெறுகிறார்.

ஒட்டு மொத்த பயணத்தின் பாரத்தையும் படத்தின் கதை மனதிலிருந்து இறக்கி வைக்கிறது, திரைமொழி நம்மை பிரமிக்க வைக்கிறது.

Sony LIV OTT வழியாக மக்கள் பார்வைக்கும் வந்து சேர்ந்துள்ளது.

https://www.sonyliv.com/movies/koozhangal-tamil-1000248195

மொத்தத்தில் “கூழாங்கல்” சினிமா மீது காதல் கொண்டவர்களுக்கு ஒரு கொண்டாட்டம்

 

 

Comments (0)
Add Comment