குழலி விமர்சனம்

நடிகர்கள் – “காக்கா முட்டை” விக்னேஷ், ஆரா.
இயக்குனர் – செரா. கலையரசன்
தயாரிப்பாளர்கள் – கே பி. வேலு, எஸ் ஜெயராமன், எம்.எஸ். ராமச்சந்திரன்
இசை – டி.எம்.உதயகுமார்
ஒளிப்பதிவு – சமீர்

கதைக்களம்…

காக்கா முட்டை (சுபு) விக்னேஷ் நாயகன். ஆரா (குழலி) நாயகி.

ஒன்றாக பள்ளியில் படிக்கும் இவர்கள் காதலிக்கின்றனர். இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவர மகளின் படிப்பை நிறுத்திவிடுகிறார் செந்தி அம்மா.

பின்னர் வேறு ஒருவருடன் அதே ஜாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்கிறார்.

அதன் பின்னர் காதலர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் என்ன ஆனது என்பது இந்தக் குழலி.

காக்கா முட்டையில் சிறுவனாக நடித்த விக்னேஷ் தான் இந்த படத்தின் நாயகன். அவருக்கு படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லை. பயந்த சுபாவம் கொண்டவனாக நடித்திருக்கிறார்.

ஆராவின் கண்கள் ரொம்ப அழகு. கண்களால் பாதி பேசி விடுகிறார். ஆனால் வாயைத் திறந்து பேசினால் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரோட சொந்த குரலா? என தெரியவில்லை. ஒரு ஆணின் குரல் போல உள்ளது.

ஆரா மற்றும் அவரின் அம்மா செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஆனால் படத்தில் ஜாதி வெறி பிடித்தவர்களாக நடித்துள்ள பலர் ஓவர் ஆக்டிங் செய்துள்ளனர். வைத்தியராக வருபவர் எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார்

கிளைமாக்சில் , “என்னை படிக்க விடுங்கடா” என்று ஆரா உயிருக்கு போராடுவது பதை பதைக்க வைக்கிறது.

எம் உதயகுமாரின் இசை. பாடல்கள் இசைஞானி மெட்டுக்களாய் இதம். பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை.

படத்திற்கு மூன்று நான்கு பாடல்கள் போதுமானது. ஆனால் ஐந்து ஆறு பாடல்கள் போட்டுவிட்டு நம்மை வெறுப்பேற்றி விட்டார் இயக்குனர்.

சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு. நம்மை கிராமத்துக்கே அழைத்து சென்றுவிட்டார். அப்படியொரு குளுமையான அழகு.

சாதிப் பிரச்னையில் முழுக்க முழுக்க அரைத்த மாவையே அரைத்து நம்மை கடுப்பேற்றி விட்டனர்.

கே பி. வேலு, எஸ் ஜெயராமன், எம்.எஸ். ராமச்சந்திரன் தயாரித்திருக்கின்றனர்.

சில கிராமத்தில் உலவும் சாதிய கொடுமையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரா கலையரசன். ஆனால் இடைவேளை வரை எந்த ட்விஸ்டும் இல்லை.. காதல்… இசை ஆகியவையே பிரதானமாக காட்டப்படுகிறது.

இறுதியாக சாதி வெறியர்களின் மீது காரி உமிழ்வதன் மூலம் செருப்படி கொடுத்துள்ளார்.

குழலி – சாதியால் அழியும் காதலின் நேர்த்தி

Comments (0)
Add Comment