வதந்தி – விமர்சனம் 4/5
அமேசான் பிரைமில் வதந்தி என்ற தொடரில் எஸ்ஜே சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்ம்ருதி வெங்கட், அஸ்வின் குமார் என பலர் நடித்து உள்ளனர். 8 தொடர்களாக உருவாகி உள்ளது.
பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அப்பெண் ஒரு நடிகை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இறந்ததாக சொல்லப்படும் ஹீரோயின் உயிருடன் தான் இருக்கிறார் ,இறந்தது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் என்பது தெரியவருகிறது. அக்கொலையை விசாரிக்க அதிகாரியாக எஸ்ஜே சூர்யா வருகிறார். அவர் எப்படி இந்த கொலையை கண்டுபிடிக்கிறார் வதந்தி என்பதே தொடர்.
எஸ்ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம். லைலாவிற்கு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எழுத்தாளராக நாசர் கச்சிதமாக உள்ளார். வதந்தி தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது
தொடர் முழுவதையும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். கதை எடுக்கப்பட்ட மண்ணும் அதன் சூழ்நிலையும் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது
ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிய தூண்கள் என்றால் அது இந்த இருவர் மட்டுமே வெலோனியாக நடித்த சஞ்சனாவும் விவேக் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவும் தான்.
இந்த கருவை வைத்துக்கொண்டு இத்தனை பாகங்கள் கொண்ட தொடரை அதிலும் இறுதி பாகம் வரை சஸ்பென்ஸ் உடையாமல் நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் மிகப்பெரிய சவாலோடு பயணித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில்
வதந்தி – நின்று நிதானமாக இரசித்துப் பார்க்கலாம்.