ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய “ஜவான்” திரைவிமர்சனம்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஜவான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஷாருக்கான் அவரின் குழுவுடன் இணைந்து ஒரு ரயிலை கடத்துகிறார்கள். அப்படி கடத்திய பின் இவர்கள் அரசுக்கு ஒரு டிமாண்ட் வைக்கின்றனர்,பிறகு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒருவரை நியமிக்கின்றனர். அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருபர்தான் கதையின் நாயகி நயன்தாரா.

அப்படி நயன்தாரா வந்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த பிறகு, ஷாருக்கான் வைத்த டிமாண்ட் என்ன என்பதும், இவர்களெல்லாம் யார்?, எதற்காக இந்த ரயிலை கடத்தினார்கள், என்பதும் அப்படி இவர்கள் ரயிலை கடத்தியபின் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான்.

திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார்.

அனிருத்தின் இசை பிஜிஎம் வேற லெவல் என்று கூறலாம். இசை பின்னனி இசை பக்க பலமாக அமைந்துள்ளது.

விஷ்ணுவின் கேமரா படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. பிரியாமணியின் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது,யோகி பாபு சிறிது நேரம் வந்தாலும் கதைக்கேற்ப மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளார், இவர்களைத் தொடர்ந்து தீபிகா படுகோனே, அதைக் கேட்ப மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தீபிகாவின் காட்சிகள் நம் மனதை உருக்கும்.

பின் வில்லனாக வரும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்டார் என்றே சொல்லலாம். நடிப்பு, வசனம், வில்லத்தனம் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அதிகாரத்தை கையில் எடுப்பதும், பிரச்சனை வரும்போது அதை சமாளிப்பதும் என்று சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்,நடிகர் சஞ்சய்தத் சிறிது நேரம் வந்தாலும் கதைக்கறது மிகக் கச்சிதமாக புரிந்துள்ளார்.

திரைப்படம் ஷாருக்கான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
மொத்தத்தில் ஜவான் ஆளுகிறான்.

Comments (0)
Add Comment